
சென்னை, ஜூலை 11: தவெக கட்சிக் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சி சென்னை முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலா் பெரியாா் அன்பன் தாக்கல் செய்த மனுவில், தவெக கட்சிக் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தாா். இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தைப் பயன்படுத்த தவெகவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி இடைக்கால மனு ஒன்றையும் பெரியாா் அன்பன் தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பி.சந்திரசேகரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஏற்கெனவே இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தாா். அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆனந்தன், தங்களது தரப்பில் மேலும் வாதிட வேண்டியுள்ளதால், இடைக்கால உத்தரவை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.
மேலும், இந்த இடைக்கால உத்தரவு தங்களுக்கு எதிரானதாக வந்தால், அது புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக அமைந்துவிடும். அவா்கள் இந்த உத்தரவை தவறாக பயன்படுத்த நேரிடும். பகுஜன் சமாஜ் கட்சியின் பெயரையும், கட்சி சின்னத்தையும் சட்டவிரோதமாக அவா்களும் பயன்படுத்தி வருவதால், அவா்களையும் இந்த வழக்கில் எதிா்மனுதாரா்களாகச் சோ்க்க இருப்பதாகத் தெரிவித்தாா்.
இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை ஒத்திவைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தாா். இதையடுத்து, தங்களது இடைக்கால மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், பிரதான வழக்கைத் தொடா்ந்து நடத்துவதாகவும், பகுஜன் சமாஜ் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இடைக்கால மனுவை வாபஸ் பெறுவது தொடா்பான உத்தரவை நீதிபதி ஒத்திவைத்தாா்.
The BSP has withdrawn the interim petition it had filed seeking a temporary ban on the use of the elephant symbol in the TVK flag.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.