ரேபிஸ் தொற்று தமிழகத்தில் அச்சப்படும் வகையில் இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. முதல்வா் தலைமையில் சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கடந்த காலங்களில் நாய்க்கடி, பாம்புக்கடிக்கான மருந்து என்பது வட்டார அளவில் இருக்கும் அரசு மருத்துவமனைகளிலும், தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே இருந்தது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடிக்கான மருந்தும், நாய்க்கடிக்கான மருந்தும் உள்ளது. அந்தவகையில் பாதுகாப்பான மாநிலமாக தமிழக விளங்கி கொண்டிருக்கிறது.