உங்களுடன் ஸ்டாலின் ! ஜூலை 14 ரயிலில் சிதம்பரம் செல்கிறார் முதல்வர்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைத் தொடக்கி வைக்க, ஜூலை 14 ரயிலில் சிதம்பரம் செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
mk stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சென்னையிலிருந்து ஜூலை 14ஆம் தேதி ரயில் மூலம் சிதம்பரம் செல்லவிருக்கும் முதல்வர் ஸ்டாலின், 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை, வரும் 15.07.2025 அன்று தமிழ்நாடு முதல்வர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார்.

எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்கி வைக்க ஜூலை 14ஆம் தேதி மாலை சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் விரைவு ரயிலில் முதல்வர் சிதம்பரம் செல்கிறார். சிதம்பரம் நகராட்சியில் ஜூலை 15ல் நடைபெறும் நிகழ்ச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

ஜூலை 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் களப்பணிகளை நேரில் ஆய்வு செய்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

பிறகு, 16-ஆம் தேதி சோழன் விரைவு ரயிலில் சென்னை திரும்புகிறார்.

இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். தமிழகம் முழுவதும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சுமார் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த முகாம்களில்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Chief Minister Stalin, who will travel from Chennai to Chidambaram by train on July 14, will launch the Stalin Project with you in Chidambaram on the 15th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com