
திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அலுவலகம் செல்வோர் உள்பட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை எண்ணூரிலிருந்து மும்பைக்கு எண்ணெய் ஏற்றிக் கொண்டு, சுமார் 52 டேங்கர்களுடன் இந்த ரயில் சென்றுகொண்டிருந்தது.
திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் திடீரென டேங்கர் பெட்டியொன்றில் தீப்பற்றியது. தொடர்ந்து, அடுத்தடுத்த பெட்டிகளில் தீ பரவிக் கொண்டிருக்கிறது.
தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர். காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிக்க: திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் டேங்கர் ரயில் பற்றியெரிகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.