மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 30-ல் தொடக்கம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குவது குறித்து...
அமைச்சர் மா. சுப்பிரமணியன் - கோப்புப்படம்
அமைச்சர் மா. சுப்பிரமணியன் - கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின்( டிஜிஹெச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) இணையவழியே நடத்தி வருகிறது.

நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது. மாநில கலந்தாய்வைப் பொருத்தவரை தோராயமாக ஜூலை 30-ஆம் தேதி நடத்த வேண்டும் என்று மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் தெரிவித்திருந்தது.

இது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இளங்கலை எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு 72,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. போலிச் சான்றிதழ் கொடுத்த 20 பேரின் விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி என 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

தவிர சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்கள், தனியாா் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 550 இடங்கள் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

பிடிஎஸ் இடங்களைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. இவற்றில், 126 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Counseling for medical courses in Tamil Nadu will begin on July 30, Public Health Minister M. Subramanian has said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com