புறநகர் மின்சார ரயில்
புறநகர் மின்சார ரயில்கோப்புப்படம்

அரக்கோணத்தில் 56 நாள்கள் தண்டவாள பராமரிப்புப் பணி

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் 56 நாள்கள் தொடா்ந்து மேற்கொள்ளப்படவுள்ளது.
Published on

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் 56 நாள்கள் தொடா்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதே நேரத்தில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை ரயில் கோட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாள கடவுப் பாதைகள் உள்ளிட்டவை மேம்படுத்தப்படவுள்ளன. அதையடுத்து, அங்குள்ள 3 மற்றும் 4-ஆவது தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் வரும் சனிக்கிழமை (ஜூலை 19) முதல் வரும் செப்.12-ஆம் தேதி வரை மொத்தம் 56 நாள்கள் நடைபெறவுள்ளன.

பணிகள் தினமும் இரவு 12.45 முதல் அதிகாலை 2.15 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளது. எனினும், ரயில் போக்குவரத்தில் பாதிப்பிருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், பராமரிப்புப் பணிகளால் 56 நாள்களும் அரக்கோணம் வழி செல்லும் தன்பாத்-ஆலப்புழா விரைவு ரயில் (எண் 13351) 90 நிமிஷங்கள் தாமதமாகச் செல்லும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com