முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவிருந்த திருப்பூர் மாவட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. முதல்வர் 2 நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 2 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவிருந்த திருப்பூர் மாவட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஜூலை 22, 23 தேதிகளில் முதல்வர் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்குச் செல்லவிருந்ததது குறிப்பிடத்தக்கது.
Summary
Minister M.P. Saminathan said that CM MK stalin's Tiruppur district events have been postponed without specifying a date.
இதையும் படிக்க | மருத்துவமனையில் முதல்வர் அனுமதி: குடும்பத்தினர், அமைச்சர்கள் வருகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!
மக்களின் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? மு.க. ஸ்டாலின் கேள்வி!







