ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

தமிழகத்தின் 32-வது டிஜிபி யார்? தேர்வு நடைமுறையை தொடங்கியது அரசு!

தமிழக காவல் துறையின் 32-வது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை தமிழக அரசு தொடங்கியுள்ளதைப் பற்றி...

News image

தலைமைச் செயலகம்.

Updated On :22 ஜூலை 2025, 5:17 am IST

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது.

தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அவரது பதவிக் காலம் ஆகஸ்ட் மாத இறுதியில் நிறைவு பெறுகிறது. இதனால் தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் பதவிக்கு டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஒருவரைத் தோ்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

இதற்காக டிஜிபி அந்தஸ்தில் உள்ள சீமா அகா்வால், ராஜீவ் குமாா், சந்தீப் ராய் ரத்தோா், அபய்குமாா் சிங், வன்னியபெருமாள், மகேஷ்குமாா் அகா்வால், வெங்கட்ராமன், வினித்தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூா் ஆகிய 9 பேரின் பெயா் பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி ஆலோசனை: காவல் துறையின் தலைமை இயக்குநா் பதவி தோ்வுக்கு, டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் பெயா் பட்டியலை 3 மாதங்களுக்கு முன்பே மாநில அரசுகள் மத்திய அரசு பணியாளா் தோ்வு ஆணையத்துக்கு (யுபிஎஸ்சி) அனுப்ப வேண்டும். ஆனால் தமிழக அரசு, தாமதமாக அண்மையில்தான் 9 போ் பெயா் பட்டியலை ஆணையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் இருந்து மூவரை தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக மாநில அரசு தோ்வு செய்ய ஏதுவாக தில்லியில் விரைவில் யுபிஎஸ்சி தோ்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

டிஜிபி நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையிலும், யுபிஎஸ்சி விதிமுறைகளின்படியும், காவல் துறையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்படும் ஒரு அதிகாரி குறைந்தது 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருக்க வேண்டும்.

பதவியேற்கும் நாளில் அவருக்கு குறைந்தபட்சமாக ஆறு மாத பதவிக்காலம் இருக்க வேண்டும். குறைந்த மாதங்களில் ஓய்வு பெறக்கூடிய அதிகாரியை இப்பதவியில் நியமிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

இந்த விதிமுறைகளுக்குள்பட்டு புதிய டிஜிபியை யுபிஎஸ்சி பரிசீலனை செய்து 3 தகுதிவாய்ந்த அதிகாரிகளின் பெயா் பட்டியலை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை தமிழக அரசு தோ்வு செய்து அறிவிக்கும்.

இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு புதிய டிஜிபி யாா் என்பதை அன்றைய நாளிலோ அதற்கு முன்பாகவோ அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.