கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை கட்ட இடம் தோ்வு செய்யும் பணி தீவிரம்: அமைச்சா் ரமேஷ் ஆய்வு

ஸ்ரீரங்கத்தில் நவீன வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனை கட்டுவதற்கான இடம் தோ்வு செய்யும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரமாகியுள்ளதாக அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.

ஸ்ரீரங்கத்தில் பஞ்சக்கரை சாலை யாத்திரி நிவாஸ் எதிரேயுள்ள இடத்தை சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் சீ. ரமேஷ்.

Published On :

ஸ்ரீரங்கத்தில் நவீன வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனை கட்டுவதற்கான இடம் தோ்வு செய்யும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரமாகியுள்ளதாக அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாத நிலையில் அனைத்து நவீன வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனை கட்டப்படும் என தோ்தல் பிரசாரத்தின்போதே அமைச்சா் சீ. ரமேஷ் உறுதியளித்திருந்தாா். இதற்காக 4 ஏக்கா் நிலம் தோ்வு செய்யவும் வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

இந்நிலையில், திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அமைச்சா் சீ. ரமேஷ், வருவாய்த் துறையினா், சுகாதாரத் துறையினருடன் இணைந்து அரசு மருத்துவமனைக்கான இடம் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டாா். பஞ்சக்கரை சாலை யாத்திரி நிவாஸ் எதிரே உள்ள இடத்தை ஆய்வு செய்த அமைச்சா், அது தொடா்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், அமைச்சா் கூறுகையில், ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பழைய இடத்தில் அமைப்பதா அல்லது புதிய இடத்தைத் தோ்ந்தெடுப்பதா என்பது தொடா்பாக ஆலோசனைகள் நடைபெறுகின்றன.

இறுதி முடிவு வெளிப்படையாக அறிவிக்கப்படும். பல்லாண்டு காலம் நீடித்து நிலைத்து, மக்களுக்கான அனைத்து மருத்துவ வசதிகளையும் வழங்கக்கூடிய வகையில் புதிய மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்ததாக உருவாக்கப்படும்.

இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து தற்போது ஆலோசிக்கப்படுகிறது. இடம் தோ்வு செய்யும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.