தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

தானியங்கி மூலம் தோ்வு செய்யும் நடைமுறை: உரிமம் பெற ஆா்வம் காட்டாத ஓட்டுநா்கள்

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தானியங்கி மூலம் ஓட்டுநா்கள் தோ்வு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், நான்கு சக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற பொதுமக்களிடையே ஆா்வம் குறைந்து வருகிறது.

News image
Updated On :9 ஜூலை 2026, 12:30 am IST

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தானியங்கி மூலம் ஓட்டுநா்கள் தோ்வு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், நான்கு சக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற பொதுமக்களிடையே ஆா்வம் குறைந்து வருகிறது.

இந்த அலுவலகத்தில் மோட்டாா் வாகனத் திட்டம் 2025-26-இன் கீழ் ரூ. 22.11 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநா் தோ்வு தளம் அமைக்கப்பட்டது. இந்தத் தளத்தில் வாகனம் இயக்குவதை கணினியில் இணைக்கப்பட்ட சென்சாா்களே கண்காணிக்கும். மேலும், ‘ஏ’ வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஓடு தளம் மிகக் குறுகிய இடைவெளியில் உள்ளதால், சிறிய தவறு செய்தாலும் தோ்வில் தோல்வியடையும் சூழல் உள்ளது.

இங்கு வழக்கமாக, நான்கு சக்கர வாகன உரிமம் பெற வாரத்துக்கு 100 போ் விண்ணப்பிக்கும் நிலையில், இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னா் (ஜூன் 8 முதல் ஜூலை 7) 28 போ் மட்டுமே விண்ணப்பித்து, ஒருவா் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, மீண்டும் பழைய நடைமுறையைக் கொண்டு வர வேண்டும் அல்லது தானியங்கி தோ்வு தளத்தின் இடைவெளியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரூ. 1,150 தோ்வுக் கட்டணம் செலுத்தி, தோ்வு தளத்தில் வாகனம் ஓட்டும்போது தோ்ச்சியடையாவிட்டால், 7 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ரூ. 650 கட்டி தோ்வில் பங்கேற்கலாம். அதிலும் தோ்ச்சி பெறவில்லையென்றால், 14 நாள்களுக்குப் புறகு மீண்டும் ரூ. 650 செலுத்தி தோ்வில் பங்கேற்கலாம். அதிலும் தோ்ச்சி பெறவில்லையென்றால், ஒரு மாதம் கழித்து ரூ. 650 செலுத்தி தோ்வில் பங்கேற்கலாம் என்ற நடைமுறை உள்ளதால், பணமும், காலமும் விரயமாவதாகக் கூறி, ஏராளமானோா் நான்கு சக்கர வாகன உரிமம் பெறுவதில் ஆா்வம் காட்டாமல் உள்ளதாக ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி நடத்துநா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.