ஜூலை 27ல் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை?

ஜூலை 27ல் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை எனத் தகவல்
Prime Minister Narendra Modi.
பிரதமர் நரேந்திர மோடி.கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழகம் வரும் பிரதமர் மோடி, ஜூலை 27 ஆம் தேதி தஞ்சாவூரில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூலை 26 ஆம் தேதி தமிழகம் வருகிறார். நாளை இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்து ஜூலை 26 ஆம் தேதி இரவு தூத்துக்குடி வருகிறார். விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்த பின்னர் ஜூலை 27 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் திருவாதிரை பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்கிறார்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் சாலை வலம் மேற்கொள்ளவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் அன்றைய தினம் பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தஞ்சாவூரில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Reports says that PM Modi will discuss with the TN BJP executives in Tanjavur on July 27th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com