முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை எப்படி இருக்கிறது? - உதயநிதி பேட்டி

முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை பற்றி துணை முதல்வர் உதயநிதி தகவல்...
udhayanidhi stalin
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

முதல்வர் நலமாக இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை பற்றி பேசுகையில்,

"முதல்வர் நலமாக இருக்கிறார். இன்று காலை சில பரிசோதனைகள் எல்லாம் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அதற்கான அறிக்கையை கொடுப்பார்கள். நேற்று மருத்துவமனையில் இருந்து அறிக்கை கொடுத்துள்ளார்கள். 3 நாள்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியிருக்கிறார்கள். முதல்வர் விரைவில் குணமடைந்து வந்துவிடுவார்" என்று தெரிவித்தார்.

முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் 3 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் முதல்வர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று முதல்வரின் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பிரதமர் மோடி உள்பட பலரும் முதல்வரை போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.

Summary

Deputy Chief Minister Udhayanidhi Stalin has said that the Chief Minister is doing well and will recover soon and return home.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com