சென்னை: உரிய அனுமதியின்றி மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்தில் 'ராத்திரி சிவ ராத்திரி' பாடல் பயன்படுத்தியதை எதிர்த்து இளையராஜா தொடர்ந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தைச் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், "நடிகை வனிதா விஜய்குமார், நடன இயக்குநர் ராபர்ட் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மிஸஸ் & மிஸ்டர். இந்தப் படத்தில் எனது இசையில் வெளிவந்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம் பெற்ற ‘ராத்திரி சிவ ராத்திரி’ பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது காப்புரிமை மீறிய செயலாகும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில், மிஸஸ் & மிஸ்டர் படத்தில் அனுமதியின்றி தனது பாடலைப் பயன்படுத்தியதோடு, அந்தப் படத்தின் விளம்பரங்களில் தனது பெயரும் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதற்கும் தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வனிதா விஜயகுமார் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வனிதா விஜயகுமார் தரப்பில், "இளையராஜாவின் 4,850 பாடல்களை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. அவர்களிடமிருந்து தான் இந்தப் பாடலை வாங்கினோம். இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்த இளையராஜாவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டதாக, தெரிவிக்கப்பட்டது .
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சோனி மியூசிக் நிறுவனத்தை வழக்கில் சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிக்க: பிரிட்டன் புறப்பட்டார் பிரதமர் மோடி!
Summary
The Madras High Court has ordered the inclusion of Sony Music in the case filed by Ilayaraja.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நூலினைப் பகுத்துணர்

ராமாயணா டிரைலர் ஒத்திவைப்பு: உலக அளவில் வெளியிடவிருக்கும் சோனி பிக்சர்ஸ்!

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



