
தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆக. 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆக. 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்.
மேலும், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு செயல்படும்.
உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஆக. 9 ஆம் தேதி (சனிக்கிழமை) முழு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.