19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூலை 24) முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும்.
சென்னை
திருவள்ளூர்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
விழுப்புரம்
வேலூர்
திருப்பத்தூர்
ராணிப்பேட்டை
திருவண்ணாமலை
தூத்துக்குடி
விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியின் சில பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை
நீலகிரி
திருப்பூர்
திண்டுக்கல்
தேனி
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் வியாழன், வெள்ளி (ஜூலை 24, 25) ஆகிய இரு நாள்களும் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Chennai Regional Meteorological Center has stated that there is a possibility of rain in 19 districts including Chennai until 7 pm.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.