தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, பகல் 12 மணியளவில் வினாடிக்கு 75,000 கன அடியாக அதிகரிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2025, 5:58 am

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60,400 கன அடியாக அதிகரித்துள்ளநிலையில், பகல் 12 மணியளவில் வினாடிக்கு 75,000 கன அடியாக அதிகரிக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ள நிலையில், காவிரி கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் திறக்கப்பட்டு வந்த உபரி நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் உபரி நீர்வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,00,000 கன அடிவரை உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது.

காவிரி கரையோர மக்களுக்கு ஸ்டான்லி அணை (மேட்டூர் அணை உபகோட்ட ) உபகோட்ட உதவி செயற்பொறியாளர் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காவிரி கரையோரத்தில் வெள்ள நீர் அருகே சென்று புகைப்படம் எடுப்பதோ, குளிப்பதோ, துணை துவைப்பதோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதோ தவிர்க்க வேண்டும் என்றும், வெள்ள நீர் அருகே செல்லக்கூடாது என்றும் மேட்டூர் பகுதியில் வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல காவிரி கரையோரம் பகுதிகளில் வருவாய்த்துறை மூலம் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ளை கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர் தீயணைப்பு படை அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டு கொண்டதின் பேரில் 60 பேர் கொண்ட 2 குழுக்கள் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மீட்புப் உபகரணங்களுடன் செல்கின்றனர். இவர்கள் ஈரோடு மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட உள்ளனர்.

Summary

Flood warning to people living near Cauvery banks as water release from Mettur Dam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.