
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகைபுரிந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி சட்டை அணிந்துள்ளார்.
நேற்றைய நிகழ்ச்சியில் தமிழர் பாரம்பரிய உடையில் கலந்துகொண்ட நிலையில், இன்றும் வெள்ளை சட்டை, வேட்டி, துண்டு அணிந்து பங்கேற்றுள்ளார்.
தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4,800 கோடி மதிப்புள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் நிறைவடைந்த திட்டப் பணிகளை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
அதனைத் தொடர்ந்து இன்று, கங்கைகொண்ட சோழபுரம் வருகைபுரிந்துள்ளார். ஆடி திருவாதிரை நிகழ்ச்சியையொட்டி வருகைபுரிந்துள்ள மோடி, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா், பெரியநாயகி அம்மன், சண்டிகேசுவரா், விநாயகா், முருகன் ஆகிய சந்நிதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பாா்வையிடுகிறாா். பிறகு மத்திய கலாசாரத் துறை சாா்பில் நடைபெற்று வரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, நினைவு நாணயத்தை வெளியிடுகிறாா்.
இதையும் படிக்க | பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்த 5 கோரிக்கைகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.