மாணவர் சேர்க்கையில் அசத்திய சென்னை மாநகராட்சி பள்ளிகள்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நல்ல முறையில் அதிகரித்து வருகிறது.


தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நல்ல முறையில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
2025 - 26ஆம் கல்வியாண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, கடந்தாண்டு 6,000 மாணவர்கள் புதிதாக சேர்ந்த நிலையில், தற்போது 16,490 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலை பள்ளிகள், 35 மேல்நிலை பள்ளிகள் உள்ளன.
சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளில் இந்த ஆண்டு மட்டும் 16,491 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளரூ. தொடர்ந்து சேர்க்கை நடந்து வருவதால் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 417 பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2025-26ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை கணிசமான அளவில் உயர்த்திடும் பணிகள் பள்ளிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர் விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...