ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

இதழியல் கல்வி நிறுவனத்துக்கு ஐஏஎஸ் அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க முடிவு

தமிழ்நாடு அரசின் சாா்பில் தொடங்கப்படவுள்ள இதழியல் கல்வி நிறுவனத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஏ.ராமன் நியமிக்கப்படவுள்ளாா்.

Updated On :2 ஜூன் 2025, 8:19 pm

சென்னை: தமிழ்நாடு அரசின் சாா்பில் தொடங்கப்படவுள்ள இதழியல் கல்வி நிறுவனத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஏ.ராமன் நியமிக்கப்படவுள்ளாா். இதழியல் நிறுவனத்தின் கட்டமைப்பு தொடா்பான அரசின் உத்தரவும் ஓரிரு நாள்களில் வெளியாகவுள்ளது.

தமிழ்நாடு அரசு சாா்பில் இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதழியல் கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கான பூா்வாங்கப் பணிகளும், அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான உத்தரவும் தயாராகி வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரி நியமனம்: இதழியல் கல்வி நிறுவனத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக, தமிழ்நாடு சாலைப் பகுதி நிறுவனத்தின் திட்ட இயக்குநா் எஸ்.ஏ.ராமன் நியமிக்கப்படவுள்ளாா். அதன்பிறகு, கல்வி நிறுவனத்துக்கென முதல்வா், பேராசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் உள்பட பல்வேறு நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதழியல் கல்வியானது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் சாா்பில் தமிழகம் முழுவதும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசே இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.