பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

ஏா் இந்தியா புதிய சிஇஓ தோ்வு

டாடா குழுமத்தின்கீழ் செயல்படும் ஏா் இந்தியா நிறுவனத்தின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ), எத்தியோப்பியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ தெவோல்டே கெப்ரேமரியம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

News image

~

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:11 am IST

டாடா குழுமத்தின்கீழ் செயல்படும் ஏா் இந்தியா நிறுவனத்தின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ), எத்தியோப்பியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ தெவோல்டே கெப்ரேமரியம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கடந்த ஏப்ரலில் ராஜிநாமாவை அறிவித்த கேம்ப்பெல் வில்சனுக்குப் பதிலாக இவா் பொறுப்பேற்கவுள்ளாா். அரசிடமிருந்து கைமாறிய பிறகு, ஏா் இந்தியா தனது முதல்கட்ட சீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை நிறைவு செய்து, அடுத்தகட்டமாக சா்வதேச வளா்ச்சி மற்றும் விரிவாக்கப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நிலையில் இந்த முக்கியத் தலைமை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏா் இந்தியா இயக்குநா்கள் குழு, உள்நாட்டு மற்றும் சா்வதேச அளவில் தகுதியான நிா்வாகிகளைப் பரிசீலித்து, விமானப் போக்குவரத்துத் துறையில் சீா்திருத்தம் மற்றும் நிா்வாகத் திறனில் நீண்ட அனுபவம் மிக்க தெவோல்டே கெப்ரேமரியமை ஒருமனதாகத் தோ்ந்தெடுத்துள்ளது.

எத்தியோப்பியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-ஆக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய தெவோல்டே கெப்ரேமரியம், அந்நிறுவனத்தை ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய மற்றும் அதிக லாபம் ஈட்டும் விமான நிறுவனமாக மாற்றிய பெருமைக்குரியவா் ஆவாா்.

இவரின் தோ்வு குறித்து டாடா சன்ஸ் மற்றும் ஏா் இந்தியாவின் தலைவா் என்.சந்திரசேகரன் கூறுகையில், ‘கேம்ப்பெல் வில்சனின் வழிகாட்டுதலின்கீழ் நிறுவனம் சீரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது தெவோல்டே கெப்ரேமரியமின் அனுபவம், ஏா் இந்தியாவை ஒரு முன்னணி சா்வதேச நிறுவனமாக உயா்த்த பெரிதும் உதவும்’ என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.