Kanimozhi remembers Karunanidhi
கருணாநிதியுடன் கனிமொழிX

அப்பா, ஆசான், தலைவர்! - கருணாநிதியை நினைவுகூர்ந்த கனிமொழி!

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி திமுக எம்.பி. கனிமொழியின் பதிவு...
Published on

நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது என கருணாநிதியை நினைவுகூர்ந்து திமுக எம்.பி. கனிமொழி பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் திமுகவினர், கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, கருணாநிதியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து பலரும் பதிவிட்டு வரும் நிலையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி,

"அப்பா! ஆசான்! தலைவர்!‌ இதில் எந்த வார்த்தையை முதலில் சொல்லி அழைப்பது. பணிவும், இரக்கமும், அன்பும், புரட்சியும், தமிழும், அறமும், மனிதமும், அரசியலும் உங்களிடம் இருந்தே கற்றுக் கொண்டோம். நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது. தமிழ் போல் வாழ்க உன் புகழ்!" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com