
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் திமுகவினர், கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். திமுகவினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக அண்ணாவின் சிலைக்கும் முதல்வர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'தமிழக அரசு மீண்டும் நீதிமன்றத்தை நாடி விடும் என்ற அச்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவம் வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.