
சென்னை: நல்ல செய்தி விரைவில் வரும், ஆனால் எங்கிருந்து வரும்? தோட்டத்திலிருந்து வருமா என்றெல்லாம் தெரியாது. அதுவரை நாம் காத்திருக்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலுக்கு வயது வரம்பு கிடையாது. இதற்குக் கருணாநிதி ஒரு உதாரணம். மலேசிய பிரதமர் மகாதிர் உதாரணம் என்று பாமக தலைவர் ராமதாஸ் தனது பேட்டியைத் தொடங்கியிருப்பது பல விஷயங்களை அவர் சூசகமாக சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக கூட்டணி வைக்கப்போவது தேசிய கட்சியா? மாநில கட்சியா? என்ற கேள்விக்கு கூட்டணி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று பதிலளித்திருந்தார். ஆனால் எங்கிருந்து வரும்? தோட்டத்திலிருந்து வருமா? என்றால் தெரியாது என்றார் சிரித்தபடி.
ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, ஆடிட்டர் குருமூர்த்தியை தைலாபுரத்திலும் சென்னையிலும் சந்தித்தேன். மோடி எனக்கு நெருங்கிய நண்பர், தேசிய அளவில் தலைவர்களுடன் நல்ல நட்பு உள்ளது என்றும் கூறினார்.
கூட்டணி குறித்து 2 அல்லது 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும், கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது. அமித் ஷாவை இதுவரை நான் சந்தித்தது இல்லை என்று பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்தார் ராமதாஸ்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!
இதைத்தொடர்ந்து, அன்புமணி உடன் பேசியது என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது ரகசியம், அதைச் சொல்ல முடியாது என்று கூறிவிட்டு ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.