8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன்

ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.

மா. சுப்பிரமணியன் - கோப்புப் படம்

Published On :8 ஜூன் 2025, 2:50 pm IST

சென்னை: தமிழகம் முழுவதும் இன்னும் ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு இலவசமாக உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும் என்றும், இதில், மக்கள் முழுமையாக உடற்பரிசோதனை செய்யலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ், புதிய மருத்துவக் கட்டமைப்பு உருவாகி வருகிறது. அதில் சென்னைக்கு சிறப்பான இடம் இருக்கும். வெளிநாட்டிலிருந்து 25 சதவீதம் பேர் தமிழகத்தில் சிகிச்சைக்காக வருகிறார்கள். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

முன்னதாக, தமிழகம் முழுவதும் உயா் மருத்துவ பரிசோதனை முகாம்கள் ரூ.13.58 கோடியில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அறிவித்திருந்தார்.

அதன்படி, பொது சுகாதாரத் துறை சாா்பில் ஆண்டுதோறும் 1,256 உயா் மருத்துவ சேவை முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாரந்தோறும் சனிக்கிழமை அல்லது தகுந்த நாள்களில் அவற்றை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடி மற்றும் எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து முகாம் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

உடல் பரிசோதனையில், சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், எக்ஸ் ரே, இசிஜி, எக்கோ உள்பட முழுமையான உடல் பரிசோதனைகளும், காசநோய், தொழுநோய், புற்றுநோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். இதைத் தவிர 15 உயா் சிறப்பு மருத்துவத் துறை ஆலோசனைகளும் வழங்கப்படும்.

ஒரு முகாமுக்கு ரூ. 75,000 வீதம் 1,256 முகாம்களுக்கு ஆண்டுதோறும் ரூ.13.58 கோடி செலவு ஏற்படும். அதில் ரூ.9.42 கோடி தேசிய சுகாதார திட்டம் மற்றும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட நிதியின் கீழ் பெறப்படும்.

மீதமுள்ள ரூ.4.15 கோடி மட்டும் பரிசோதனைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்து பொருள்கள் வாங்க மாநில நிதியிலிருந்து வழங்கப்படும். இந்த நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டு ஒப்புதல் உரிய விதிகளின் கீழ் அண்மையில் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.