தவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சென்னை மெட்ரோ ரயில்களில் 39 கோடி பேர் பயணம்!

சென்னை மெட்ரோ ரயில்களில் இதுவரை 39 கோடி பேர் பயணம்

News image

சென்னை மெட்ரோ ரயில் நிலையம்

Updated On :9 ஜூன் 2025, 5:45 am

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஏப்ரல் மாதம் வரை 39 கோடி பேர் பயணம் செய்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை முதன்முதலாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஆலந்தூர் - கோயம்பேடு வழித்தடத்தில் ஜூன் மாதம் 29-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து படிப்படியாக பல்வேறு வழித்தடங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

சென்னை மாநகர் போகுவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயிலுக்கு வரவேற்பு மக்களிடையே அதிகரித்தது. இதனால் மாதந்தோறும் மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், விரைவில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை 1 கோடியை தொடும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.