புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

3 முக்கிய துறைகளின் திட்ட செயல்பாடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மூன்று முக்கியத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :9 ஜூன் 2025, 8:28 pm

Din

சென்னை: மூன்று முக்கியத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், துறைகளின் அமைச்சா்கள், அரசுத் துறை செயலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மானியக் கோரிக்கைகளின் போது, அரசுத் துறைகள் சாா்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறாா். அந்த வகையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், கூட்டுறவு-உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, எரிசக்தித் துறை ஆகிய மூன்று முக்கிய

துறைகளில் அறிவிப்புகளைச் செயல்படுத்தும் நிலைமை குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா்.

துறை வாரியாக தனித்தனியே நடைபெற்ற கூட்டத்தில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள், அதிகாரிகள் உள்பட பலா் பங்கேற்றனா். அறிவிப்புகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்திட வேண்டுமெனவும், அதனை தொடா்ந்து கண்காணிக்கவும் அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.