கனியாமூர் பள்ளி வன்முறை வழக்குத் தொடர்பாக விழுப்புரத்திலுள்ள இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் வெள்ளிக்கிழமை 41 சிறார்கள் ஆஜராகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி 2022, ஜூலை 13-ஆம் தேதி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி வளாகத்திலிருந்த பொருள்கள் சூறையாடப்பட்டதோடு வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. காவல்துறை வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதுதொடர்பாக 53 சிறார்கள் உள்பட 916 பேர் மீது வழக்குப்பதியப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை, காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தது, பசு மாடுகளுக்கு துன்புறுத்தல் அளித்தது, அவற்றை ஓட்டிச் சென்றது, சின்னசேலம் பகுதியில் காவல்துறையின் உயர் அலுவலர்களை வரவிடாமல் தடுத்தது, சில உயர் அலுவலர்களைத் தாக்கியது தொடர்பான வழக்குகளை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் வன்முறை தொடர்பான வழக்கில் 53 சிறார்கள் மீது வழக்குப்பதியப்பட்டிருப்பதால், அவர்கள் மீதான விசாரணை விழுப்புரத்திலுள்ள இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடைய 53 பேரில் 41 பேர் வெள்ளிக்கிழமை ஆஜராகினர். 12 பேர் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்குப் பிறகு, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இளஞ்சிறார் நீதிக்குழும நீதிபதி (பொ) ராஜேசுவரி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் ஜூன் 23-இல் வெளியீடு; ஜூலை 6 முதல் கலந்தாய்வு

சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வெடித்த வன்முறை: 400 பேர் கைது! | Paris

பிளஸ் 2 தோ்வில் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் பள்ளி சிறப்பிடம்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



