பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்கள் மற்றும் நிலங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் ஜனவரி 27ஆம் தேதியில் இருந்து 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டிருந்தது.
மேலும் அரசு நிலங்களில், நிரந்தரமாக புதிய கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கு அரசு அலுவலா்கள் இனி அனுமதி வழங்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தது.
நீதிமன்றம் உத்தரவிட்டு, 12 வாரங்கள் கெடு முடிவடைந்த போதிலும், பொது இடங்களில் வைக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளன.
இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் எனவும், எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(ஜூன் 18) விசாரணைக்கு வந்த நிலையில், பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வரும் ஜூலை 2 ஆம் தேதிக்குள் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் புதிதாக நடப்படும் கொடிக் கம்பங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.1000 கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்றும் பொது இடங்களில் நடைபெறும் அரசியல் கட்சி கூட்டத்திற்கு வாடகை வசூல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவதூறு வழக்கில் பாஜக எம்எல்ஏவுக்கு அழைப்பாணை அனுப்பிய மாஜிஸ்திரேட் உத்தரவு ரத்து: தில்லி நீதிமன்றம்
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை
மாம்பழம் சின்னம் விவகாரம்: ராமதாஸுக்கு தொடர் பின்னடைவு!

ஹௌராவில் ராமநவமி ஊர்வலம்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


