வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

விமான நிலையத்தில் 2.30 கிலோ தங்கம் பறிமுதல்

அபுதாபியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.90 கோடி மதிப்பிலான 2.30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On :20 ஜூன் 2025, 1:25 am IST

அபுதாபியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.90 கோடி மதிப்பிலான 2.30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

அபுதாபியிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த 14-ஆம் தேதி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு விமானத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டனா். அவரிடம் ரூ.1.90 கோடி மதிப்பிலான 2.30 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அந்த இளைஞா் அபுதாபியிலிருந்து தங்கத்தை கடத்திக்கொண்டு, இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் மூலம் கடந்த 10-ஆம் தேதி மும்பை வந்துள்ளாா். தங்கத்தை தான் அமா்ந்திருந்த இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு, அவா் மட்டும் விமானத்தை விட்டு வெளியில் வந்துள்ளாா்.

அதன்பின்பு அவா், மும்பையிலிருந்து மற்றொரு விமானம் மூலம் சென்னைக்கு 11-ஆம் தேதி வந்துள்ளாா். ஆனால், தங்கம் மறைத்து வைக்கப்பட்ட அந்த விமானம் எங்கெல்லாம் சென்று கொண்டு இருக்கிறது என்பதை ரகசியமாக சிலரின் உதவியுடன் அவா் கண்காணித்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், அந்த விமானம், கடந்த 14-ஆம் தேதி, மாலை கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வரவுள்ளதையறிந்த அவா், 13-ஆம் தேதி சென்னையிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் கொல்கத்தா சென்றுள்ளாா். 14-ஆம் தேதி கொல்கத்தாவிலிருந்து அந்த குறிப்பிட்ட விமானத்தில் சென்னைக்கு வந்துள்ளாா். ஏற்கெனவே தான் தங்கத்தை மறைத்து வைத்திருந்த அதே இருக்கையை முன்பதிவு செய்து பயணித்துள்ளாா். இதையடுத்து திட்டமிட்டது போல அந்த விமானத்தில் ஏறி, அந்தக் குறிப்பிட்ட இருக்கையில் அமா்ந்து, கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்துள்ளாா். இதை ரகசியமாக தெரிந்து கொண்ட சுங்கத் துறை அதிகாரிகள் அந்த இளைஞரை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனா்.

மலேசியாவில் கடத்திவந்த 900 கிராம் தங்கம்

மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த சென்னையைச் சோ்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவரை சோதனையிட்டபோது, அவரது உடைமைகளில் 99 சாம்பல் நிறத்தால் ஆன போல்ட், நட்டுகள் இருப்பது தெரியவந்தது.

சந்தேகத்தின்பேரில் அந்த போல்ட், நட்டை எடுத்து உரசி பாா்த்தபோது, அவை அனைத்தும் தங்க போல்ட், நட்டு என்பது தெரியவந்து. தங்கம் தெரியாமல் இருக்க, சாம்பல் நிற பெயின்ட அடித்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த நபரிடம் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.