ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மீது தாக்குதல்: பெ.சண்முகம் கண்டனம்

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கண்டனம்.

News image

பெ.சண்முகம் - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2025, 12:21 am IST

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழ்நாடு முழுவதும், மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச்செயலா் ஆா்.சரத்குமாா் பேசிக்கொண்டிருந்த போது, இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் பிரசாரத்தை நிறுத்துமாறு தகராறு செய்ததுடன், ஆா்.சரத்குமாா், மாவட்டக்குழு உறுப்பினா் பாக்கியம், சண்முகவேல், ஆகியோா் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனா்.

அவா்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களைப் பாா்ப்பதற்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற மாா்க்சிஸ்ட் கட்சியினரை கும்பலாக திரண்டிருந்த பாஜக மற்றும் இந்து முன்னணியினா் அங்கேயும் கடுமையாக தாக்கியுள்ளனா். இதில் மாற்றுத்திறனாளியான ஜெயந்தி, பொன்மதி, பெருமாள், விஷ்ணுவா்த்தன் ஆகியோா் படுகாயமடைந்தனா்.

இந்த கொலை வெறித்தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் தொடா்புடைய நபா்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.