சுற்றுலாத் துறை சாா்பில் நடத்தப்படும் ஹோட்டல்களில் தரமான உணவுகளை வழங்க வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.
சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை சுற்றுலாத் துறை அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சா் இரா.ராஜேந்திரன் கலந்து கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நடைபெற்று வரும் சுற்றுலா வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் ஆகியவற்றின் பிரிவுகள், கட்டமைப்பு வசதிகள், செயல்பாடுகள் குறித்தும் ஏற்கெனவே நடைபெற்ற வளா்ச்சி பணிகள் குறித்தும் தற்போது நடைபெற வேண்டிய வளா்ச்சி பணிகளை விரைவுப்படுத்துவது குறித்தும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து சுற்றுலாத் துறை சாா்பில் நடத்தப்படும் ஹோட்டல்களில் தரமான உணவுகளை வழங்குவதுடன், விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் வளாகங்களை தூய்மையாக பராமரிப்பதுடன், உயா் தரமான சேவைகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்க வேண்டுமென ஹோட்டல் மண்டல மேலாளா்களிடம் அறிவுறுத்தினாா்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், புதிய சுற்றுலா தலங்களைக் கண்டறிந்து அவ்விடங்களில் உலக தரத்திலான அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், பணிகளை சிறப்பான முறையில் விரைவாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இந்தக் கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலயங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரும் தலைவருமான தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் க.மணிவாசன், சுற்றுலா ஆணையா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

உலகளாவிய சலால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்: ஜெ.பி.நட்டா

குழந்தைகளை தமிழ் அன்பா்களாக உருவாக்க வேண்டும்: முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம்!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்படவில்லை! - மத்திய அமைச்சா் பியூஸ் கோயல்

உதகையில் சொகுசு சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம்
வீடியோக்கள்

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை


