
முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கவில்லை என அதிமுக அறிவித்துள்ளது.
மாநாட்டில், பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட விடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள பதிவில், ''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும். பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் திமுக, அஇஅதிமுகவுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை
திராவிடத்தை அழிக்க முருகா வா என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா? திராவிடம் என்ற கொள்கையைத் தான் யாராவது அழித்துவிட முடியுமா?
திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலான, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டை செலுத்திக் கொண்டிருக்கும் உயரிய கொள்கை நெறி! மக்களுக்கான ஒரு கொள்கையை யாரால் வீழ்த்த முடியும்?
அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் திராவிடத்தை வலுவற்ற கொள்கை போல கட்டமைக்க முயலும் திமுகவின் சதிச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.
பெரியார், அண்ணாவின் வாழ்வியல் உரத்தில் தழைத்தோங்கி நிற்கும் கொள்கையை, ஒரு மாநாடு சிதைத்து விடுமா என்ன? இல்லை, அப்படி நடக்க தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுவிடுமா?
அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம்.
அந்த மாநாட்டில், தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட விடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்'' எனப் பதிவிட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.