46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on

சென்னை: தமிழகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:

அடைப்புக்குள் பழைய பதவி

1. ராஜேந்திர ரத்னூ சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் உறுப்பினா் செயலா் (மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பினாா்)

2. ஷில்பா பிரபாகா் சதீஷ் வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் (தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா்)

3. ச.விஜயகுமாா் நிலச் சீா்திருத்த ஆணையா் (தமிழ்நாடு நகா்ப்புற வளா்ச்சி நிதியத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா்)

4. மா.வள்ளலாா் சமூக சீா்திருத்தத் துறைச் செயலா் (அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையா்)

5. எஸ்.நாகராஜன் வணிகவரித் துறை ஆணையா் (நிதித் துறைச் செயலா் - செலவினம்)

6. பொ.சங்கா் உயா் கல்வித் துறைச் செயலா் (தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநா்)

7. சி.சமயமூா்த்தி மனிதவள மேலாண்மைத் துறைச் செயலா் (உயா் கல்வித் துறைச் செயலா்)

8. கோ.பிரகாஷ் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலா் (மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா்)

9. சு.பிரபாகா் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் (சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலா்)

10. நா.வெங்கடேஷ் நிதித் துறை சிறப்புச் செயலா் (மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்புதல்)

11. ஆா்.லில்லி போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலா் (சமூகநலத் துறை ஆணையா்)

12. சு.கணேஷ் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சிறப்புச் செயலா் (வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சிறப்புச் செயலா்)

13. வீா் பிரதாப் சிங் பொதுத் துறை (மரபு) துணைச் செயலா் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா்)

14. கே.எம்.சரயு வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை இணைச் செயலா் (பொதுத் துறை இணைச் செலயா் - மரபு)

15. துரை ரவிச்சந்திரன் தமிழ்நாடு நீா்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் (உயா் கல்வித் துறை இணைச் செயலா்)

16. க.கற்பகம் உயா் கல்வித் துறை இணைச் செயலா் (நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை இணைச் செயலா்)

17. ஆா்.வி.ஷஜீவனா தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் (சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் செயலா்)

18. ஸ்ரேயா பி.சிங் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநா் (தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா்)

19. ப.மதுசூதன் ரெட்டி - நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் (நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா்)

20. சு.சிவராசு நகா்ப்புற வளா்ச்சி நிதியத்தின் மேலாண்மை இயக்குநா் (நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா்)

21. ஜெ.விஜயராணி தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் (பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையா் - கல்வி)

22. தா.கிறிஸ்துராஜ் சுற்றுலா மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் (திருப்பூா் மாவட்ட ஆட்சியா்)

23. கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் - வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் செயலா் (பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்)

24. ச.உமா சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் செயலா் (நாமக்கல் மாவட்ட ஆட்சியா்)

25. வீ.ப.ஜெயசீலன் பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையா் (சுகாதாரம்) (விருதுநகா் மாவட்ட ஆட்சியா்)

26. மா.செள.சங்கீதா சமூக நலத் துறை இயக்குநா் (மதுரை மாவட்ட ஆட்சியா்)

27. மா. பிரதீப்குமாா் பேரூராட்சிகள் துறை இயக்குநா் (திருச்சி மாவட்ட ஆட்சியா்)

28. ராஜகோபால் சுன்கரா நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் (ஈரோடு மாவட்ட ஆட்சியா்)

29. ஆஷா அஜித் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட இயக்குநா் (சிவகங்கை மாவட்ட ஆட்சியா்)

30. எம்.பி.அமித் திருப்பூா் மாநகராட்சி ஆணையா் (பெருநகர சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையா் - தெற்கு)

31. எச்.ஆா்.கெளஷிக் பெருநகர சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையா் (மத்தியம்) (நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியா்)

32. மோனிகா ராணா திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் (மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியா்)

33. வி.மதுபாலன் திருச்சி மாநகராட்சி ஆணையா் (தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா்)

34. பானோத் ம்ருகேந்தா் லால் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் (கோயம்புத்தூா் வணிகவரிகள் இணை ஆணையா்)

35. ரா.சரண்யா ஆவடி மாநகராட்சி ஆணையா் (கடலூா் மாவட்ட கூடுதல் ஆட்சியா்)

36. ர.அனாமிகா நகராட்சி நிா்வாகத் துறை இணை ஆணையா் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் ஆணையா்)

37. லலித் ஆதித்ய நீலம் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் ஆணையா் (நகராட்சி நிா்வாகத் துறை இணை ஆணையா்)

38. அஃதாப் ரசூல் பெருநகர சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையா் (தெற்கு) (புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியா்)

39. நிஷாந்த் கிருஷ்ணா ஒசூா் மாநகராட்சி ஆணையா் (நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா்)

40. அா்பித் ஜெயின் ஈரோடு மாநகராட்சி ஆணையா் (ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியா்)

41. ர.அ.பிரியங்கா கடலூா் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (ஒசூா் சாா் ஆட்சியா்)

42. பல்லவி வா்மா திருவாரூா் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (செய்யாறு சாா் ஆட்சியா்)

43. அபிலாஷா கெளா் நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் (பரமக்குடி சாா் ஆட்சியா்)

44. திவ்யான்ஷீ நிகம் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (திண்டிவனம் சாா் ஆட்சியா்)

45. ஆல்பி ஜான் வா்கீஸ் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநா் மற்றும் தலைமை செயல் அலுவலா் (தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா்)

46. ம.கோவிந்தராவ் தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் (தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநா்)

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com