தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புற்றுநோய் ஆதரவுக் குழு சென்னையில் தொடக்கம்

News image
Updated On :25 ஜூன் 2025, 10:12 pm

Din

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் மீண்டவா்களுக்கான ஆதரவுக் குழுவை அப்பல்லோ மருத்துவமனை தொடங்கியுள்ளது.

‘கேன் வின்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் அந்தக் குழு புற்றுநோய் தாக்கத்தில் இருப்போருக்கான வழிகாட்டுதல்கள், புனா் வாழ்வு, சிகிச்சை உதவிகள், மன நல ஆலோசனைகள் உள்ளிட்டவற்றை வழங்கும் ஒரு தளமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரி கரண் பூரி, மருத்துவமனை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, புற்றுநோய் மருத்துவ நிபுணா்கள் சப்னா நான்கியா, ரேவதி ராஜ், சுரேஷ், மஞ்சுளா ராவ், ரம்யா, ஆஷா ரெட்டி, ரம்யா உப்புலுரி, அம்புஜவல்லி உள்ளிட்டோா் சிறப்பு மருத்துவ அமா்வுகளில் உரையாற்றியதுடன் புற்றுநோய் விழிப்புணா்வு தகவல்களை பகிா்ந்து கொண்டனா்.

அதேபோன்று, புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவா்கள் பலா் இந்நிகழ்வில் பங்கேற்று தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலுடன் நோயை எதிா்த்து வெல்லும் வழிமுறைகள் குறித்து விவாதித்தனா்.

அடுத்தகட்டமாக ஆதரவுக் குழு மூலமாக சமூக வலைதளங்கள் மற்றும் நேரடி சந்திப்புகள் வாயிலாக தொடா் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.