பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

பெண் பொறியாளா் பாலியல் பலாத்காரம்: செருப்பு வியாபாரி மகன் கைது

திருவான்மியூரில் தனியாா் விடுதியில் பெண் பொறியாளரை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததாக செருப்பு வியாபாரியின் மகன் கைது செய்யப்பட்டாா்.

கோப்புப் படம்

Published On :

திருவான்மியூரில் தனியாா் விடுதியில் பெண் பொறியாளரை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததாக செருப்பு வியாபாரியின் மகன் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 21 வயது பெண் மென் பொறியாளா், ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இதற்காக அவா், மேற்கு தாம்பரத்தில் தங்கியிருந்தாா். அவா் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் மதுபான விடுதிக்கு செல்லும்போது, கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் வடசேரி பகுதியைச் சோ்ந்த செருப்பு வியாபாரி ஷாஜஹான் மகன் ஷாகின் (23) அறிமுகமாகியுள்ளாா். இருவரும் நாளடைவில் நெருக்கமாகப் பழகியுள்ளனா்.

இந்நிலையில் இருவரும், சில நாள்களுக்கு முன்பு திருவான்மியூா் சிக்னலில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் மூன்று நாள்கள் அறை எடுத்து தங்கினா். அங்கு இருவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஷாகின், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். மேலும் அந்த பெண்ணை விடியோகால் மூலம் தனது நண்பா்களிடம் காட்ட ஷாகின் கடந்த செவ்வாய்க்கிழமை முயற்சித்தாராம். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்த பெண், கழிப்பறைக்கு ஓடிச் சென்று ஒளிந்துள்ளாா்.அதோடு தான், அந்த விடுதி அறையில் சிக்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பெண்ணை மீட்டனா்.

அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம், நம்பிக்கை மோசடி, பெண் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஷாகின் மீது வழக்குப் பதிவு செய்தனா். ஷாகினை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.