காவல்துறை விசாரணையில் இளைஞர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

காவல்துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்.
Case transferred to CBCID
காவல்துறை விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமார்X
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலுக்கு விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் பக்தா் ஒருவா் காரில் வந்துள்ளார். இவா் 10 பவுன் தங்க நகைகள், ரூ. 2 ஆயிரத்தை காரில் வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யச் சென்றாா். இதன்பிறகு, திரும்பி வந்து பாா்த்தபோது, காரில் இருந்த நகைகள், பணம் காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து அந்தப் பெண் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, கோயிலில் தற்காலிகமாக காவலராகப் பணியாற்றிய மடப்புரத்தைச் சோ்ந்த பாலகுரு மகன் அஜித்தை (28) போலீஸாா் விசாரணைக்காக திருப்புவனம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இந்த நிலையில், காவல் நிலையத்தில் அஜித் மயக்கமடைந்ததால், அவரை போலீஸாா் மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து காவல் நிலையத்துக்குச் சென்ற அவரது குடும்பத்தினா், அஜித்தின் உடலை பாா்க்க போலீஸாா் அனுமதி மறுத்துள்ளனர். அப்போது காவல் நிலையத்தில் போலீஸாா் தாக்கியதால்தான் அஜித் உயிரிழந்ததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளைஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அஜித் குமாரின் குடும்பத்தினரின் போராட்டத்தையடுத்து இந்த சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்த 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே உடற்கூராய்வில் அஜித் குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Summary

The case of death of a youth during a police investigation(lock-up death) in Thiruppuvanam, Sivaganga district, has been transferred to the CBCID.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com