ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
சென்னை உயர் நீதிமன்றம்- Center-Center-Chennai
Updated On :3 மார்ச் 2025, 6:15 am

DIN

சென்னை: திரைப்படத் தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனுக்காக, நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் நிறுவனம் ஜகஜால கில்லாடி என்ற திரைப்படத்துக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதது தொடர்பான வழக்கில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்துக்குச் சொந்தமான ஈசன் தயாரிப்பு நிறுவனம், ஜகஜால கில்லாடி என்ற படத்தைத் தயாரிக்க ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் ரூ.3.74 கோடியை கடனாக வாங்கியிருக்கிறது.

கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடி செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கடன் கொடுத்த தனபாக்கியம் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.

இதில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி டி. ரவீந்திரன் மத்தியஸ்தம் செய்ய நியமிக்கப்பட்டார். வழக்கு விசாரணையில், துஷ்யந்த் நிறுவனம் பதிலளிக்காததால், சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.