ரூ. 1500 கடனுக்காக தகராறு... கீழே தள்ளிவிட்டதில் இலங்கை அகதி பலி!

கொடுத்த பணத்தை கேட்டபோது ஏற்பட்ட தகராறு தொடர்பாக
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சூலூர்: கொடுத்த பணத்தைக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கீழே தள்ளிவிடப்பட்ட இலங்கை அகதி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகே குளத்தூர் பிரிவு பகுதியில் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இப்பணியில் தருமபுரி மாவட்டம் கரியாமங்கலம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் ராஜரத்தினம் மகன் சுதாகர் (31) மேலும் சில அகதிகளுடன் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், இவருடன் வேலை செய்யும் தருமபுரி பாலக்கோடு  அருகே உள்ள பகுதியில் வசிக்கும் செல்வகுமார் மகன் இலங்கை அகதியான திலக்க்ஷன்(25) என்பவருக்கு ஏற்கெனவே ரூ. 1500 கடனாக கொடுத்ததாகத் தெரிகிறது.

இதையும் படிக்க: விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணிக்க டி-ரிசர்வ்டு டிக்கெட்!

அதைத்திருப்பி கேட்டபோது, இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திலக்க்ஷன், சுதாகரை தள்ளி விட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுதாகருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இவரை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த சுதாகர் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக சூலூர் போலீஸார் ஏற்கெனவே விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்ததை மாற்றி, திட்டமிடப்படாத கொலை வழக்காக வழக்குப் பதிவு செய்து திலக்க்ஷனைக் கைது செய்தனர்.

சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் திலக்க்ஷனை ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com