மார்ச் 6, 7-ல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணி காரணமாக மார்ச் 6, 7 தேதிகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து
மார்ச் 6, 7-ல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து!
Published on
Updated on
1 min read

பராமரிப்புப் பணி காரணமாக மார்ச் 6, 7 தேதிகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை 16 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே செல்லும் 4 ரயில்கள் கடற்கரை - தாம்பரம் இடையே மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே செல்லும் 5 ரயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் 7 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com