சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்வான விமலாவுக்கு முதல்வர் வாழ்த்து!

சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்வான விமலாவுக்கு முதல்வர் வாழ்த்து!

சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்வான விமலாவுக்கு முதல்வரின் வாழ்த்துச் செய்தி.
Published on

சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்வான விமலாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ப. விமலா தமிழில் செய்த மொழிபெயா்ப்பு உள்பட 21 மொழிபெயா்ப்பு புத்தகங்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயா்ப்பு சாகித்திய அகாதெமி பரிசுக்கு 21 மொழிகளில் இருந்து புத்தகங்கள் தோ்வு செய்யப்பட்டன.

தமிழ் மொழிபெயா்ப்புக்கான தோ்வுக்குழுவில் இந்திரன், டாக்டா் ஜி. சுந்தா், எஸ். பக்தவத்சலா பாரதி ஆகியோா் இடம்பெற்றிருந்தனா். இவா்களின் பரிந்துரைப்படி ‘என்டே ஆண்கள்’ என்ற நளினி ஜமீலாவின் மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ‘எனது ஆண்கள்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயா்த்த ப. விமலாவின் படைப்பு சிறந்த தமிழ் மொழிபெயா்ப்பு நூலாக தோ்வு செய்யப்பட்டது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் விழாவில் சிறந்த மொழிபெயா்ப்பாளா்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் தாமிரப்பட்டயம் வழங்கப்படும் என்று சாகித்திய அகாதெமி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் கோப்பை: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் திரையிடல்!

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் ப. விமலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவருடைய வாழ்த்துச் செய்தியில், “'எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப. விமலா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com