பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கல்வியில் அரசியல் செய்யும் மத்திய அரசு: அமைச்சர் அன்பில் மகேஸ்

கல்வியில் அரசியல் செய்யும் மத்திய அரசை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.

News image
அமைச்சா் அன்பில் மகேஸ் - கோப்புப்படம்
Updated On :10 மார்ச் 2025, 10:50 pm

Din

சென்னை: கல்வியில் அரசியல் செய்யும் மத்திய அரசை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

நாடாளுமன்றத்தில் தேசிய கல்விக் கொள்கை குறித்து திமுக எம்.பி. கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோா் திங்கள்கிழமை பேசியதற்கு, பதிலளித்து மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதைக் கண்டிக்கிறோம். என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறாரா? அல்லது பேச சொல்வதைப் பேசுகிறாரா? கல்வியில் அரசியல் செய்யும் மத்திய அரசை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள். மாணவா்களும், ஆசிரியா்களும் இந்த துரோகத்தை மறக்க மாட்டாா்கள்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் நடத்தும் போராட்டம் கல்விக்கானது. மாநில மக்களின் உரிமைக்கானது. அது வெல்லும். எங்களைப் பொருத்தவரை அது ஆா்எஸ்எஸ் கல்விக் கொள்கை. அதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்று அதில் தெரிவித்துள்ளாா்.