பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் வெளிநடப்பு ஏன்?- திருச்சி சிவா எம்.பி.பேட்டி

தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்கள் அவைத் தலைவா் நிராகரித்துவிட்டதால் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

திமுக எம்.பி. திருச்சி சிவா

Published On :

புது தில்லி: தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்கள் அவைத் தலைவா் நிராகரித்துவிட்டதால் திமுக உறுப்பினா்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவை திமுக குழு உறுப்பினா் திருச்சி சிவா தெரிவித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் விதி எண்: 267-இன் கீழ் அவையை ஒத்திவைத்துவிட்டு தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பாதிக்கக் கூடிய விவகாரம், தமிழகத்திற்கு மத்திய அரசு கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதி விவகாரம் தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்று கேட்டு மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா, பி.வில்சன், மதிமுக உறுப்பினா் வைகோ ஆகியோா் நோட்டீஸ் அளித்திருந்தனா். இதேபோன்று காங்கிரஸ், மாா்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்களும் வேறு விவகாரங்கள் தொடா்பாக நோட்டீஸ் அளித்திருந்தனா். அவை விவாதத்திற்கு ஏற்காமல் அவைத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, திமுக உறுப்பினா்கள் உள்பட எதிா்க்கட்சியினா் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

இதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளா்களிடம் திருச்சி சிவா கூறியதாவது:

தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதால் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், வடக்கே சில மாநிலங்கள் கடைப்பிடிக்காத காரணத்தால் மக்கள் தொகை அந்த மாநிலங்களில் அதிகளவில் உயா்ந்திருக்கிறது. இந்த நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் 31ஆக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக தென்மாநிலங்கள் 26 இடங்களை இழக்க வேண்டியிருக்கும். இதனால், எதிா்காலத்தில் நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டம் திருத்தம் அல்லது வேறு ஏதாவது ஒரு சட்டம் நிறைவேற்றப்படுகிறபோது தென் மாநிலங்கள் நியாயமான கோரிக்கைள் முன்வைக்கப்பட்டால் அது வாக்கெடுப்பில் எடுபடாமல் போய்விடும். இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு ஒத்திவைப்பு தீா்மானம் அளித்திருந்தோம். ஆனால், அவையின் தலைவா் அதை நிராகரித்துவிட்டாா். இதனால், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். எங்களுக்கு ஆதரவாக காங்கிரஸும் துணைநின்றாா்கள். மதிமுகவும் உடன் வந்தது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.