அதிமுக, பாஜக,பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திமுக, காங்கிரஸின் ஆதரவுடன் முதல்வர் விஜய் கொண்டுவந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களை நடைபெற்ற பேரவைத் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், போதுமான ஆதரவு கிடைக்காததால் இந்த மசோதா தோல்வியடைந்தது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே, மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற சூழலில் ஆம் ஆத்மியிலிருந்து பாஜகவுக்கு வந்த எம்பிக்கள், திமுக, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்களின் ஆதரவுடன் மசோதாவைத் தாக்கல் செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து முடிவெடுக்க எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த சனிக்கிழமை (ஆக. 8) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 4 ஆம் நாளான இன்று (ஆக. 12) தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். அந்தத் தனித் தீர்மானத்தில் மக்களவைத் தொகுதிகள் 543 தொகுதிகளாகத் தொடர வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்தத் தனித் தீர்மானத்துக்கு பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அதேநேரத்தில், அதிமுகவின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவைச் சேர்ந்த ஒரேயொரு எம்.எல்.ஏ. போஜராஜன், பாமக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் நிலைப்பாடு இல்லை என்று தெரிவித்தார்.
முதல்வர் விஜய் கொண்டுவந்த தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில், தவெக, திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Summary
A resolution opposing the constituency delimitation introduced by Chief Minister Vijay was passed amidst opposition from the AIADMK, BJP, PMK, and DMDK.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 - இன்றைய நேரலை! (ஆக. 12)
தொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!

தொகுதி மறுவரையறை: பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!
தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதி
விடியோக்கள்

பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் விஜய்! | TN Assembly | TVK



