மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

தொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!

தொகுதி மறுவரையறை தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு அளித்திருப்பது பற்றி...

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் - TN Assembly

Published On :

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று (ஆக. 12) புதன்கிழமை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். இந்தத் தனித் தீர்மானத்துக்கு விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

பாஜக, பாமக, தேமுதிக, அதிமுக ஆகிய கட்சிகள் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், தீர்மானத்துக்கு ஆதரவு அளித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

”தொகுதி மறுவரையறையால் எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. தற்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதி மறுவரையறை கொண்டு வந்தால் தென்னிந்தியாவுக்கு எவ்வளவு பாதிப்பு என்று நாட்டுக்கே வெளிப்படுத்தியவர் எங்கள் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின்தான்.

கடந்த ஆட்சியில் தனித் தீர்மானம் கொண்டுவந்த அப்போதைய முதல்வர், தென்னிந்திய மாநில முதல்வர்களுக்கு கடிதமும் எழுதியிருந்தார். நியாயமான தொகுதி மறுவரையறை என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் கூட்டம் நடத்தினோம். அப்போது தொகுதி மறுவரையறை நடவடிக்கையை அடுத்த 20 ஆண்டுகள் நடத்தக் கூடாது என்று தெரிவித்தோம்.

தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து போராட்டம் நடத்தினோம். திமுக காட்டிய எதிர்ப்புதான் நாடாளுமன்றத்தில் மசோதா தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம்.

தற்போது மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

33 சதவிகிதம் மகளிர் இடஒதுக்கீட்டை திமுக முழுமையாக ஆதரிக்கிறோம். 1971 மக்கள்தொகை அடிப்படையிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை திமுக வரவேற்கிறது” எனத் தெரிவித்தார்.

Summary

DMK supports the separate resolution on constituency delimitation!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.