
தமிழ்நாட்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் வரும் நிதியாண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
இந்த நிலையில், தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், வலுவலான கொள்கையின் காரணமாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளது. தமிழகத்தில், தனி நபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரிக்கும். இது தேசிய சராசிரயை விட 1.64 மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பொதுமுடக்கக் காலத்துக்குப் பிறகு, தமிழகத்தின் சேவைத் துறைகள் வேகமாக மீண்டெழுந்தன. மாநில வளர்ச்சியில் கோவை, மதுரை, திருப்பூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. மலையைத் தகர்த்து ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் கட்டிய அரண்மனை! விடியோ
சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் அமையவிருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பொதுவாக, மத்திய பட்ஜெட் தாக்கலின்போதுதான் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும். மத்திய அரசின் நிதிநிலை எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் பொருளாதார ஆய்வறிக்கை அமைந்திருக்கும். ஆனால் தற்போது தமிழக அரசு முதல் முறையாக பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.