தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பட்ஜெட்: பள்ளி, கல்லூரிகளுக்கான அதிரடி அறிவிப்புகள்

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் முக்கிய அறிவிப்புகள்.

News image
பள்ளி மாணவர்கள்
Updated On :14 மார்ச் 2025, 5:11 am

DIN

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்..

முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு பின்னர் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.

ரூ.3,796 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.

மாணவர், ஆசிரியர்களின் நலன் கருதி மாநில அரசே நிதியை விடுவித்துள்ளது. தமிழக அரசே தனது சொந்த நிதியிலிருந்து முக்கிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரு.1,000 கோடி ஒதுக்கீடு.

ரூ.50 கோடியில் 500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம். அதற்காக ரு.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்வு!

ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு!

ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு!

காலை உணவுத் திட்டம் நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு

கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி!

ஐந்து ஆண்டுகளுக்குள் உலக தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தை முன்னிலைப்படுத்தவும், ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக மாற்றவும் நடவடிக்கை

அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மேலும் 15,000 இடங்கள் அமைக்கப்படும்.

வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்.

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநகராட்சிகளில் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள்.

ஏஐ உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டய மற்றும் பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்.

குன்னூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

அரச பொறியியல் கல்லூரிகளில் ஏஐ உள்ளிட்ட நவீன தகவல் தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.