தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகரிக்க சிறப்புத் தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டு வரும் அறிவிப்பில்..
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியமாக வழங்கப்படும்.
30 லட்சம் உழவர்களுக்கு பயிர்க் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு, இறுதிச் சடங்கு செலவு தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
காவிரி படுகை மாவட்டங்களில் குறுவை சாகுபடியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
உழவர் நல மையங்கள் வாயிலாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
மலைப்பகுதி விவசாயிகள் முன்னேற்றத்துக்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மானாவரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ரூ.2,000 மானியமாக வழங்கப்படும்.
இதையும் படிக்க.. நத்தம் புளி உள்பட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்!
தமிழ்நாட்டில் 16.3 லட்சம் ஹெக்டேரில் தோட்டக் கலை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
2023 - 24ஆம் ஆண்டில் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.3.58 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுளள்து என்று அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறுவை தொகுப்பு திட்டத்தில் ரூ. 44,160 ஏக்கா் பயன்: வேளாண் இயக்குநா் தகவல்

காண்டாமிருக பாதுகாப்புக்கு சிறப்புத் திட்டம்: அமைச்சா் பூபேந்தா் யாதவ் தகவல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் ரூ.21.84 கோடிக்கு குறுவை தொகுப்பு திட்டம் வழங்க இலக்கு: வேளாண் உற்பத்தி ஆணையா் தகவல்
ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



