ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

’நலமாக இருக்கிறார்’: ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலையை விசாரித்த முதல்வர்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலையை விசாரித்த முதல்வர்.

ஏ.ஆர். ரஹ்மான் - முதல்வர் ஸ்டாலின்.

Published On :16 மார்ச் 2025, 11:33 am IST

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நலமாக இருப்பதாகவும், அவரின் உடல்நிலையை மருத்துவர்களிடம் விசாரித்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று(மார்ச் 16) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கழுத்தில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!

அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி துணை முதல்வர் உதயநிதி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.