4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மடிக்கணினி ஏன் வழங்கவில்லை? - இபிஎஸ் கேள்வி!
மடிக்கணினி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக - அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை தமிழக பொது பட்ஜெட்டும் சனிக்கிழமை வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பேரவை நிகழ்வுகள் இன்று(திங்கள்கிழமை)காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க | அப்பாவு எதிர்ப்பு தீர்மானம் தோல்வி!
பேரவைத் தலைவர் அப்பாவு மீதான அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு பின்னர் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் அப்பாவு, பேரவைத் தலைவர் பதவியில் தொடர்ந்து வருகிறார்.
பின்னர், 'கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்' என பட்ஜெட்டில் கூறியது குறித்து திமுக - அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.
பள்ளி மாணவர்களின் அறிவு வளர்வதற்கும் விஞ்ஞான வளர்சிக்காகவும் வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியது ஏன்? 4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் ஏன் மடிக்கணினி வழங்கவில்லை? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை, அதிமுக ஆட்சியிலேயே நிறுத்திவிட்டீர்கள். அந்த திட்டத்தைதான் சரிசெய்து தற்போது பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறோம். மடிக்கணினி திட்டத்தை மீண்டும் கொண்டுவந்தது திமுக அரசுதான்.
திமுக ஆட்சிக்கு வந்தபோது, வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவோம் என்று கூறினோம். அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறோம்" என்று கூறினார்.
முன்னதாக, அதிமுக ஆட்சியில் எத்தனை மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் உள்ளதா? என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க | வெந்நீர் குடித்தால் தொப்பை குறையுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.