போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

அப்பாவு எதிர்ப்பு தீர்மானம் தோல்வி!

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுகவின் தீர்மானம் தோல்வியடைந்தது பற்றி...

News image
Updated On :17 மார்ச் 2025, 12:24 pm IST

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை அதிக நேரம் பேச அனுமதிப்பதில்லை, தொலைக்காட்சியில் நீண்ட நேரம் தங்களது பேச்சை நேரலை செய்தில்லை என்ற குற்றச்சாட்டுகளை வைத்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் இன்று கொண்டுவந்தார்.

இந்த தீர்மானம் விவாதத்துக்கு வந்த நிலையில், பேரவையைவிட்டு அப்பாவு வெளியேறினார். துணைத் தலைவர் பிச்சாண்டி அவைக்கு தலைமையேற்று வழிநடத்தினார்.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக, பாமக உறுப்பினர்கள் பேரவைக் கூட்டத்தில் இன்று கலந்துகொள்ளவில்லை.

விவாதத்தின் இறுதியில் பேசிய முதல்வர், ”என் தலையீடோ, அமைச்சர்களின் தலையீடோ இல்லாமல் நடுநிலையோடு பேரவை வழிநடத்தி வருபவர் அப்பாவு” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் தீர்மானம் தோல்வியடைந்தது. தொடர்ந்து, எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்று டிவிஷன் முறையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதிலும், தீர்மானம் தோல்வி அடைந்ததாக பேரவைத் துணைத் தலைவர் பிச்சாண்டி அறிவித்தார்.

தீர்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளும் எதிராக 154 வாக்குகளும் பதிவானது. இதையடுத்து, மீண்டும் பேரவைக்கு வந்த அப்பாவு, பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார்.

இதனிடையே, அதிமுக கொண்டு வந்த தீர்மானத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் ஆதரவு தெரிவித்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.